ஞாயிறு, அக்டோபர் 16, 2011

ஏவப்பட்டவைகளும் - விலக்கப்பட்டவைகளும்.


فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَة ً وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا  لَغَافِلُونَ 

உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். 10 ;92

முஹர்ரத்தில் ஏவப்பட்டவைகளும் - விலக்கப்பட்டவைகளும்.

புனித மாதம்

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! 6”36

மேற்குறிப்பிட்ட புனித மாதங்களாகிய நான்கு மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும் அதில் பத்தாம் நாளும், அதற்கு முந்தைய ஒன்பதாவது நாளுமாகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்க வேண்டும்.

ஆஷூரா நோன்பு பற்றிய நபிமொழிகள்
·         ரமளான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும் (திர்மிதி)

·         ஆஷூரா தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் தானும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு பிறருக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இது யூதர்களும் கிருத்துவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்றார்கள் (முஸ்லிம்).

·         ஆஷூராவின் நோன்பு முந்தைய வருடத்துப் பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது (புகாரி)

ஏன் நோற்கப் படுகிறது ?

இறைதூதர் மூஸா(அலை) அவர்களுக்கு ஏகஇறைவன் சில அற்புதங்களை செய்து காட்டும் ஆற்றலை வழங்கினான் அவர்கள் செய்துகாட்டும் அற்புதங்களை சூனியம் என்று அந்நாட்டு மன்னன் ஃபிர்அவுன் உதாசீனப்படுத்தினான் காரணம் சூனியக்கலை அக்கால கட்டத்தில் நாடெங்கும் கோலோச்சிக் கொண்டிருந்தது.

மூஸா(அலை) அவர்கள் செய்துகாட்டும் அற்புதங்களை முறியடித்து அவர்களை மக்களிடம் தோல்வியுறச் செய்வதற்காக எகிப்து முழுவதிலிமிருந்து சூனியக்கலையில் கைதேர்ந்த மாந்திரீகர்கள் அனைவரையும் அரண்மனைக்கு அழைத்து வர ஃபிர்அவ்ன் உத்தரவிட்டான்.

இறைதூதரின் அற்புதத்தை பொய்ப்பிக்க முணைவது என்பது ஏகத்துவத்தை குழி தோண்டி புதைப்பதற்கு எடுத்த  முயற்சியாகும். அதனால் அவனுடைய முயற்சியை முறியடித்து ஏகத்துவத்தை மேலோங்கச் செய்வதற்காக இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களை தயார் படுத்தினான் .

இறைதூதரும், மாந்திரீகர்களும் எதிரும் புதிருமாக சாகஸம் புரிவதற்காக நின்று கொண்டிருக்க மன்னன் தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்க முதலில் இறைதூதர் அவர்கள் மாந்திரீகர்களை நோக்கி நீங்களே  தொடங்குங்கள் என்றுக் கூறுகிறார்கள். 

(முதலில்) ''நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். 7:116 

அவற்றைப்பார்த்ததும் மன்னனும், மாந்திரீகர்களும், பார்வையாளர்களும் குதூகலமடைகின்றனர், அப்பொழுது இறைதூதர் அவர்கள்  இறைவன் பொய்யை அழித்து உண்மையை நிலைநாட்டுவான் என்று கூறுகிறார்கள் அதன் பின் தனது கைத்தடியை எறியும்படி இறைவன் இறைதூதருக்கு செய்தி அனுப்புகிறான். ''உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. 7:117

த்தனை மாந்திரீகர்கள் வரவழைக்கப்பட்டனரோ அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலையை கற்றிருப்பர் அத்தனையையும் இறைதூதருடைய கைத்தடியிலிருந்து வெளிப்பட்ட அற்புதம் ஒன்றுமில்லாமல் துடைத்தெறிந்துவிட்டது இதைப்பார்த்ததும் அவ்விடத்திலேயே இறைதூதர் மூஸா(அலை) அவர்களும், அவர்களுடைய சகோதரர் ஹாரூன் அவர்களும் ஏற்றுக்கொண்ட இறைவனை நாங்களும் ஏற்றுக்கொண்டோம் என்று அனைத்து மாந்திரீரகர்களும் திருக்கலிமாவை மொழிந்தனர் அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம் என்றும் கூறினர். 121, 122

தன்னை கடவுள் என்று பிரகடனப் படுத்திக்கொண்டு மொத்த மக்களையும் அடக்கி ஆணவம் செய்தவனால் இதை சகிக்க முடியவில்லை வெகுண்டெழுந்தான். தனது வலிமை மிக்க படையுடன் அவர்களை கொல்வதற்கு விரட்டுகிறான். வெருண்டோடியவர்களை செங்கடல் எதிர் கொண்டது அதற்கு மேல் அவர்களால் எங்கும் செல்ல முடியாது நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டனர் என்று நினைத்தான் அவர்களுடைய உறுதிமிக்க இறைநம்பிக்கையைப் பார்த்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இறைத்தூதருடைய கையில் உள்ள தடியால் கடலின் மீது அடிக்கச் செய்து கடலைப் பிளக்கச் செய் அவர்களை கொடுங்கோலன் ஃபிர்அவுனிடமிருந்து காப்பாற்றி விடுகிறான்.

இஸ்லாயீலின் மக்களை கடலை கடக்கச் செய்தோம் ஃபிர்அவுனும் அவனது படையினரும் அக்கிரமமாகவும் அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர் முடிவில் அவன் மூழ்கும் போது  இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிற வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன் நான் முஸ்லீம் என்று கூறினான்.10:90

அவனுடைய அரன்மணையில் எகிப்தினுடைய மொத்த மாந்திரீகர்களும் இஸ்லாத்தை ஏற்றபொழுதே இவனும் ஏற்றிருந்தால் அல்லாஹ் கண்ணியப் படுத்தி இருப்பான் காலம் கடந்து இறைவனை நம்பிக்கை கொண்டதால; அவனுடைய உடலை மட்டும் பாதுகாத்து பின்வரக்கூடிய மக்களுக்கு சாட்சியாக்குவதாக இறைவன் அவனிடம் கூறுகிறான்.

(இப்போது தானா நம்புகிறாய் ) அதற்கு முன் பாவம் செய்து கொண்டிருந்தாய், குழப்பம் செய்பவனாக இருந்தாய்.10:91, உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று(முதல்) பாதுகாப்போம், (என்று கூறினோம்) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலச்சியம் செய்வோராக உள்ளனர்.10:92.

அல்லாஹ்வுடைய அத்தாட்சியைப் பார்த்ததும் தாமதிக்காமல் அவ்விடத்திலேயே இறைநம்பிக்கை கொண்டோம், என்று அவர்கள் கூறிய அந்த உறுதிக்காக அவர்களை இறைவன் கொடுங்கோல் மன்னனுடையப் பிடியிலிருந்து  கடலைப் பிளந்து காப்பாற்றியது ஒரு முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும் அதற்கு இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக முஹர்ரம் மாதத்தின் ஆஷூரா நோன்பு நோற்கப் படுகிறது.

மாற்றமான யூத ஷியாக்களின் முடிவு 
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. 9:36 என்று அல்லாஹ் கூறும் அந்த நேரான மார்க்கத்தில் கோணலை ஏற்படுத்துவதற்காக இறைநம்பிக்கை கொண்டோம் என்று பொய்க் கூறி உண்மையாக நம்பிக்கை கொண்ட மக்களை  வழி கெடுக்க யூதர்கள் செய்த சதி தான் முஹர்ரம் மாதத்தில் அநியாயமாக ஹூசைன் (ரலி) கர்பளாவில் கொல்லப்பட்டார்கள் எனும் வதந்தியாகும்.

அம்மாதங்களில் (போர்செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்...9:36 என்ற அல்லாஹ்வுடைய உத்தரவை மீறி மதீனாவிலிருந்து கூபாவுக்கு ஹூசைன் ரலி அவர்கள் தலைமையில் வரம்புமீறி போர் நடத்திச்சென்றவர்கள் தோல்விஅடைந்தார்கள். என்பதுவே உண்மை.

இதன் பெயரால் இன்று உலகில் வாழும் ஷியாக்கள் உடல்களை கிழித்துக்கொண்டு ரெத்தம் ஓடச்செய்யும் வேடிக்கை கூத்துக்களை நாம் அதிகம் விவரிக்க வேண்டியதில்லை தொலைகாட்சிகளில் போட்டி போட்டுக்கொண்டு காட்டுவார்கள். ஒப்பாரி வைப்பது, ஆடைகளையும், உடல்களையும் கிழித்துக் கொள்வது இறை நிராகரிப்புச் செயலாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (முஸ்லிம்)

ஷியாக்கள் செய்யக் கூடிய இந்த வினோதமான வேடிக்கைகளை சன்னி முஸ்லிம்களாகிய நம்மவர்கள் செய்வதில்லை என்றாலும் ஹஸன், ஹூசைன் (ரலி) பெயரால் கொலுக்கட்டை அவித்து வழங்குவது இன்றும் இருந்து வருகிறது இதுவும் மேல்படி அடிப்படை இல்லாத அநியாயமாக கொல்லப்பட்டார்கள் என்பதை நம்பி செயல்படுவதாகும் என்பதுடன் கொலுக்கட்டை அவித்துப் பகிர்வது என்பது இனிப்புப் பொருட்களை படையல் செய்யும் மாற்றுமத கலாச்சாரத்திற்கு ஒப்பானதாகும். பிறமதக் கலாச்சாரத்தை பின்பற்றுபவன் அவர்களையே சார்ந்தவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்(அபுதாவூத்)

அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களே!
ஷியாக்களுடைய நாசகார செயலை அதனுடைய நிழல் கூட நம்மீது படியவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் கொலுக்கட்டை அவித்து பகிர்வது, நெருப்பில் உப்பைக் கொட்டுவது போன்றவைகள் அவர்களுடைய நாசகார செயலின் நிழலாகும் அதனால் அவைகளையும் செய்யக் கூடாது.

ஷியாக்களுடைய அந்த இஸ்லாம் எனும் பெயரால் நடத்தப்படும் வரம்பு மீறிய செயலை தடுக்க வேண்டும் முடிய வில்லை என்றால் மனதால் வெறுக்க வேண்டும். 

உங்களில் எவரும் ஒரு தீமையைக் கண்டால் தமது கையால் அதைத் தடுக்கட்டும், இயலாவிட்டால் தமது நாவால் அதைத் தடுக்கட்டும், அதற்கும் இயலாவிட்டால் தமது உள்ளத்தால் அதைத் வெறுக்கட்டும். அதுவே ஈமானில் பலவீனமான நிலையாகும். என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி இருப்பதால் நம்முடைய சக்திக்குட்பட்ட வரை நமது ஊர்களில் நடக்கும் மேல்படி கலாச்சாரத்தை தடுத்து நிருத்துவதற்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும், அதற்கு இயலவில்லை என்றால் மார்க்கம் என்றப் பெயரில் மேல்படி கலாச்சாரம் உள்ளே நுழைந்து விட்ட வரலாற்றை மக்களுக்கு விளக்கிக் கூற முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் என்ன காரணத்தின் அடிப்படையில் ஆஷூரா நோன்பை நோற்றார்களோ நோற்கச் சொன்னார்களோ அதே காரணத்தின் அடிப்படையில் ஆஷூரா நோன்பை நோற்றால் கடந்த வருடத்துப் பாவங்கள் மன்னிக்கப்படும்.

ஆஷூரா நோன்பு நோற்றிருக்கும் போது பயங்கரவாத இஸ்ரேலிய ராணுவத்தினால் ஒரு வார காலமாக  தொடர்ந்து சல்லடையாக்கப்பட்டு வரும் பலஸ்தீன் அப்பாவி மக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள், அப்பாவிகளை, பலஹீனர்களை, நிராயுத பானிகளை கொலை செய்யும் அதிகார வரக்த்திரை இறைவனிடம் ஒப்படையுங்கள்.

இறைவனுடைய சாபத்திற்கு ஆளான யஹூதிகளின் மீது இறைவனுடைய பிடி இறுகும் காலத்தை விரைவு படுத்தச்சொல்லிக் கேளுங்கள். அவர்களுக்கான தீர்ப்பு இறைவன்கையில் இருக்கிறது.

நாம் நேற்று அழுது கேட்டோம் இன்று அவர்கள் அப்படியேத் தானே இருக்கின்றனர் என்ற விரக்தியில்  வேண்டுதலை நிருத்திடாதீர்கள், குறைத்திடாதீர்கள்.

அரசு அன்று கேட்கும், தெய்வம் நின்று கேட்கும்.

இறைவன் குற்றவாளிகளுக்கு கண்துடைப்பு தண்டனைக் கொடுக்க மாட்டான். கடுமையான தண்டனையை கொடுப்பான், கடுமையான தண்டனை கொடுப்பத்றகாக குற்றவாளிகளை இன்னும் குற்றத்தில் மூழ்க விட்டு காலக்கெடுவை நீட்டுவான்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம். ஃபாரூக்

ஃபிர் அவ்னும், ஜார்ஜ் புஷ்ஷூம்


 
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَات وَالأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلاَ تَظْلِمُواْ فِيهِنَّ أَنفُسَكُمْ وَقَاتِلُواْ الْمُشْرِكِينَ كَآفَّةً كَمَايُقَاتِلُونَكُمْ كَآفَّةً وَاعْلَمُواْ أَنَّ اللّهَ مَعَ الْمُتَّقِينَ
வானங்களையும்> பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அல்குர்ஆன் 9:36.
ஃபிர் அவ்னும், ஜார்ஜ் புஷ்ஷூம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

உலகம் படைக்கப்பட்ட பொழுதே மாதமும் பண்ணிரண்டு என்று இறைவனால் தீர்மாணிக்கப்பட்டு அதில் நான்கு மாதங்களை அப்பொழுதே புனிதமாக்கி விட்டான் அவைகள் ரஜப்> துல்கஃதா> துல்ஹஜ்> முஹர்ரம் இந்த முஹர்ரம் மாதத்தில் தான் முஸ்லீம்களை அச்சுருத்தி வந்த மாபெரும் கொடுங்கோலன் ஃபிர்அவ்னும் அவனது சேனைகளும் மூழ்கடிக்கப்பட்டது.

ஃபிர் அவ்னின் பிரகடனம்
ஃபிர் அவ்னுடைய அரசாங்கத்திற்குக் கீழ் வாழ்ந்து வந்த இஸ்ராயீலின் சந்ததிகள் கொடுமைக்குள்ளாக்கப் பட்டார்கள். நவீன இயந்திரங்கள் மெஷின்கள் கண்டு பிடிக்கப்படாத காலகட்டத்தில் அம்மக்களைக் கொண்டே மலைகளைப் பெயர்த்து விண்ணுயர பிரமிட்களை கட்டினான். ( இவ்வாறு எலக்ட்ராணிக் உபகரணங்களுடைய உதவி இல்லாமல் மலைகளைப் பெயர்த்துக் கட்டும்; பொழுது எத்தனை மக்கள் உயிர் நீத்திருப்பார்களோ ? ) அவனது கருத்துக்கு மாற்றுக்கருத்து தெரிவிப்பவர்களைக்கொண்டு அவனது சிறைக்கூடத்தை நிரப்பினான்> பெண்களை விட ஆண்களே பெரும்பாலும் கருத்துக் கூறுபவர்களாகவும்> அரசை எதிர்த்து குரல் கொடுப்பவர்ளாகவும் இருப்பார்கள் என்பதால் ஆண்களை கொன்றொழித்து விட்டு பெண்களால் தனது நாட்டு மக்கள் தொகையை நிரப்பினான் ஏறத்தாழ மொத்த மக்களையும் வாயில்லா ஜீவன்களைப் போன்று ஆக்கியதுடன் அவர்களிடத்தில் தன்னையே கடவுள் என்றும் பிரகனடப் படுத்தி வந்தான். ''என்னைத் தவிர வேறு கடவுளை நீர் கற்பனை செய்தால் உம்மைச் சிறைப்படுத்துவேன்'' என்று அவன் கூறினான். 26:29

இவ்வாறு ஃபிர் அவ்னுடைய கோரப்பிடியில் சிக்கி கடும் சித்ரவதைகள் அனுவவித்து வந்த மக்களை மீட்டெடுக்க இறைவன் தன் புறத்திலிருந்து தூதரையும் வேதத்தையும் வழங்கினான் தனது சொந்த மதத்து மக்களை அடிமைப் படுத்தியவனுடைய கவனம் இறைத்தூதர் பக்கமும்; ஈமான் கொண்ட முஸ்லீம்களின் பக்கமும் திரும்புகிறது.

மொத்த மக்களால் எதிர்க்க முடியாதவனை சிறிய எண்ணிக்கையிலான முஸ்லீம்கள் எவ்வாறு எதிர்க்க முடியும் ? அவர்களாலும் அவனை எதிர்கொள்ள முடியவில்லை எல்லோரும் அவனை பயந்தது போன்றே முஸ்லிம்களும் பயந்தார்கள் இதனால் இன்னும் வீரியமடைந்தவன் முஸ்லிம்களை ஒட்டு மொத்தமாக துடைத்ததெறிந்திட தனது பலம் பொருந்திய ரானுவத்துடன் தானே தலைமை தாங்கி புனித முஹர்ரம் மாதத்தில் புறப்பட்டான். இப்பொழுது தான் அல்லாஹ் அவனை தனது பிடிக்குள் கொண்டு வருகிறான். 

''எனது அடியார்களை அழைத்துச் செல்வீராக! கடரில் அவர்களுக்காக ஈரமில்லாத ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பீராக! பிடிக்கப்பட்டு விடுவதைப் பற்றிப் பயப்படாதீர்! (வேறெதற்கும்) அஞ்சாதீர்!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம்.

ஃபிர்அவ்ன் தனது படையினருடன் அவர்களைப் பின்தொடர்ந்தான். கடரில் மூட வேண்டியது அவர்களை மூடிக் கொண்டது 20:77> 78 

உலகில் பலஹீனமான மக்களுடன் அட்டூழியம் செய்யும் ஒருவன் தன்னைப்போன்ற சகமனிதர்களுடைய பிடியிலிருந்து நழுவுகிறான் என்றால் அவனின் மீது இறைவனின் பிடி தீர்மானமாகி விட்டது என்று மேற்கானும் ஃபிர்அவ்ன் சம்பவத்திலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் உமது இறைவனின் பிடி கடுமையானது. 85:12.

இன்றைய ஃபிர் அவ்ன் ஜார்ஜ புஷ்

இன்று நம்மை ( முஸ்லீம்களை ) ஒரு ஃபிர்அவ்ன் அடக்கி ஆண்டு வருகிறான் நம்முடைய இனத்தை குறி வைத்து அழித்து வருகிறான் நம் எவருடைய பிடியும் அவன் மீது இறுகுவதில்லை உலகின் ஒட்டுமொத்த மக்களுடைய கருத்தையும் உதாசீனப்படுத்துகிறான் முஸ்லிம்களை ஈவிறக்கமின்றி கொன்றொழிப்பதை வாடிக்கையாகவும், அவர்கள் அழிவதைக்கண்டு ரசிப்பது அவனுக்கு வேடிக்கையாகவும் ஆகிவிட்டது.

கொடுங்கோலன் ஜார்ஜ் புஷ்ஷீம் அவனது ரானுவமும் அழிய வேண்டுமெனில் ஏக இறைவனிடம் அழுது மன்றாடுவதைத் தவிர இன்று நமக்கு வேறு வழி இருப்பதாக தெரிய வில்லை அதனால் அவனுடைய பெயரைச் சொல்லி அல்லாஹ்விடம் அழுது ஒப்படைக்க வேண்டும்.

ஆஷூரா நோன்பு
முஹர்ரம் பத்தாம் நாள் ஃபிர்அவ்னும், அவனது ரானுவ சேனையும் மூழ்கடிக்கப்பட்டதால் இறைவனுக்கு நன்றி செலுத்தும்; பொருட்டு அந்த மக்கள் நோன்பு நோற்று இறைவனைப் புகழ்ந்து வந்தார்கள் அதனடிப்படையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உத்தரவின் அடிப்படையில் நாமும் அந்த நோன்பை நோற்று வருகிறோம். நோன்பு நோற்றிருக்கும் போது வல்ல அல்லாஹ்விடம் ஜார்ஜ் புஷ்ஷூடைய கொடுங்கோன்மையை ஒவ்வொரு முஸ்லீமும் ஒப்படைப்போம்.

இறைத் தூதரின் பிரார்த்தனை
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது அபூ ஜஹ்லும் குறைஷிகளில் சிலரும் (ஒட்டகத்தின் கருப்பைச் சவ்வுகளைக் கொண்டு வரும்படி) உத்தரவிட்டார்கள். அப்போது மக்காவின் ஒரு பகுதியில் ஒட்டகம் ஒன்று அறுக்கப்பட்டிருந்தது. (அதை எடுத்து வர அவர்கள்) ஆளனுப்பினார்கள். பின்னர் அதன் கருப்பைச் சவ்வை எடுத்து நபி(ஸல்) அவர்களின் (தோள்) மீது போட்டார்கள். அப்போது ஃபாத்திமா(ரலி) வந்து அதை நபி(ஸல்)அவர்களின் மீதிருந்து அப்புறப்படுத்தினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள்.

'இறைவா! குறை»களை நீ கவனித்துக் கொள்.
இறைவா! குறை»களை நீ கவனித்துக் கொள்.

ஹா»மின் மகன் அபூ ஜஹ்லையும்> உத்பா இப்னு ரபீஆ> ஷைபா இப்னு ரபீஆ> வலீத் இப்னு உத்பா> உபை இப்னு கலஃப் மற்றும் உக்பா இப்னு அபீ முஐத் ஆகியோரையும் (நீ தண்டித்து விடு)'' என்று அவர்களுக்குக் கேடு நேரப் பிரார்த்தித்தார்கள். இவர்களை நான் (பின்னாளில்) பத்ரின் ஒரு பாழுங்கிணற்றில் கொல்லப்பட்டவர்களாக (எறியப்பட்டிருக்க)க்கண்டேன். என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்கள் நூல் புகரி : 2934.

இறைத்தூதர்(ஸல்) அவர்களுடைய காலத்தில் இவர்கள் தான் அச்சுருத்தலாகத் திகழ்ந்தார்கள் அதனால் அவர்களது பெயரைச் சொல்லி இறைவனிடம் ஒப்படைத்தார்கள் இன்று நமக்கு ஜார்ஜ் புஷ் மாபெரும் அச்சுருத்தலாக இருப்பதால் அவனுடைய பெயரைச் சொல்லி ஒப்படைப்Nபுhம்.

நாமும்

இறைவா !!

எந்த கொடுங்கோலனாகிய ஃபிர் அவ்னையும்> அவனது வலிமை மிக்க சேனையையும் மூழ்கடித்து உனது வல்லமையை நிலை நாட்டினாயோ அதேப்போன்று

  • அப்பாவி ஆப்கான் முஸ்லீம்களை கூட்டம் கூட்டமாக கொன்றொழித்த>
  • அப்பாவி ஈராக் மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்றொழித்த>
  • அப்பாவி முஸ்லீம்களை குவான்டானாமோ சிறையில் நவீன சித்ரவதைகள்  செய்த>
  • அப்பாவி ஈராக்கியர்களை அபூகரீப் சிறையில் நவீன சித்ரவதைகள் செய்து கற்புள்ள அப்பாவி முஸ்லீம் பெண்களை அவனது ஈனப்பிறவிகள் சிதைத்து சீரழிப்பதற்கு காரணமாயிருந்த>
  • அகண்ட இஸ்ரேல் உருவாவதற்கு பாலஸ்தீனத்து அப்பாவி முஸ்லீம்களை  கொன்றொழிப்பதற்கும்> அவர்களை சிறை பிடிப்பதற்கும்> நாட்டை விட்டு விரட்டி அடிப்பதற்கும் இஸ்ரேலுக்கு முதுகெலும்பாகத் திகழ்ந்த>
  • அவனது கிருஸ்தவப் புத்தாண்டை வரவேற்க எம்முடைய குர்பானி தினத்தில் சத்தாமை தூக்கிலிட்டு முஸ்லீம்களின் உலூஹியா தினத்தை கொச்சைப் படுத்திய
இன்றைய நவீன ஃபிர்அவ்ன் கொடுங்கோலன் ஜார்ஜ் புஷ்ஷையும் அவனது ( மனிதர்களால் ) அசைக்க முடியாத வலிமை மிக்க ரானுவத்தையும் மூழ்கடிப்பாயாக ! முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அளிப்பாயாக !

என்று முஹர்ரம் மாதத்தின் 10> 11வது நோன்பைப் பிடித்திருக்கும் போது உலகம் படைத்த பொழுதே அல்லாஹ்வால் சங்கை செய்யப்பட்ட புனித முஹர்ரம் மாதத்தில் அழுது பிரார்த்தனை செய்யுங்கள். பிரார்த்தனை செய்த மாத்திரத்தில் இந்த மாதமே அவனும்> அவனது சேனைகளும் மூழ்கடிக்கப் பட்டுவிடும்; என்று அவசரப்பட்டு எதிர்பார்த்து விடாதீர்கள் வல்லமை மிக்க இறைவன் அவனுக்கு கெடு விதித்திருப்பான் அதன் படி நிறைவேற்றுவான் நாம் அதைக் கண்ணால் கண்டு விட முடியவில்லை என்றாலும் நமது சந்ததியினர் கானுவார்கள்.

மேலும் இன்று நம்மில் முஸ்லீம்களுக்கு ஈமானியப் பிடிப்பு குறைந்து வருவதால் அதிகமான மக்கள் இறைவனிடத்தில் உறுதியான நம்பிக்கையுடன் இறைஞ்சவது மிகவும் அரிதாகவே காணப்படுவதால்  தோல்வியடைந்து வருகிறோம்.  மிக விரைவில் ஒரு காலம் வரும் உண்பவன் தனது சகாவை பந்திக்கு அழைப்பதைப் போல உங்களின் மீது தீய சக்திகளின் ஆதிக்கமிருக்கும். (நீங்கள்> ஈமானின் பலம் குன்றியிருப்பீர்கள்). தோழரொருவர் கேட்டார்கள் நாயகமே! நாமன்று எண்ணிக்கை குறைந்து இருப்பதால் அவ்வாறு நிகழுமோ? ஆதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள்> நீங்கள் அப்போது மிகுதியாக இருப்பீர்கள். எனினும் (ஈமான் விஷயத்தில்) நீங்கள் நுரையைப் போன்றும்> நீர்க்குமிழிகளைப் போன்றும் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் பகைவர்களின் மனதிலிருந்து உங்களைப் பற்றிய அச்சத்தை இறைவன் போக்கி விடுவான். மேலும் உங்களுடைய மனங்களில் வஹ்ன் னை ஏற்படுத்தி விடுவான்! வஹ்ன்> என்றால் என்ன? என்று வினவப்பட்டது. அதற்கு வஹ்ன் என்றால் உலக ஆசையும்> இறப்பை வெறுத்தலும் ஆகும்! என்று கூறினார்கள். நூல்: அபூதாவூது அறிவிப்பாளர்: சௌபான் (ரலி).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முன்னறிவிப்பு இன்று நடந்து கொண்டிருக்கின்றது முஸ்லீம்கள் லட்சியவாதிகள் அவர்களது இலக்கு மறுமையை நோக்கியதாக இருக்க வேண்டும் மாறாக உலக ஆசையை நோக்கியதாக இருக்கக்கூடாது என்பதை மேற்கானும் நபிகளாருடைய முன்னறிவிப்பு பறைசாற்றுகிறது. இன்று உலக ஆசையும்> மரணத்தை வெறுப்பதும் முஸ்லீம்களிடத்தில் மிகுந்து விட்டதால் முஸ்லீம்களைப் பற்றின அச்சத்தை எதிரிகளுடைய உள்ளங்களிலிருந்து இறைவன் தூரப் படுத்தி விட்டான்.

முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யமன் நாட்டுக்கு அனுப்பியபோது கூறிய உபதேசங்களின் இறுதியில் ... அநீதிக்குள்ளானவரின் பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள். ஏனெனில்> அதற்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையேதுமில்லை. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். நூல் புகாரி 4347 

சத்திய மார்க்கத்தின் மீது அளப்பறிய நம்பிக்கை கொண்டு ஃபிர்அவ்னுடைய டாம்பீக வல்லரசு மூழ்கடிக்கப்பட்ட இந்த முஹர்ரம் மாதத்தில் இறைவனிடம் உறுதியான நம்பிக்கையுடன் ஜார்ஜ் புஷ்ஷூடைய டாம்பீக வல்லரசை மூழ்கடிக்க இறைவனிடம் இறைஞ்சுங்கள்.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்